தமிழகத்தில் இன்று
ஸ்பீட் ஆதரவுக் கும்பலின் வன்முறை தொடர்கிறது
சுவா:
பிஜியில், புரட்சியாளர்களின் ஆதரவாளர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, தலைநகர் சுவாவிற்கு அருகேயுள்ள ஒருதீவிலுள்ள லாட்ஜ் ஒன்றை தீவைத்துக் கொளுத்தினர். போலீஸ் நிலையத்தையும் அவர்கள் சூறையாடமுயன்றனர்.
புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் இவர்கள். ஸ்பீடுக்கும், ராணுவ அரசுக்கும்ஞாயிற்றுக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி மே 19-ம் தேதி முதல்நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 27பினைக் கைதிகளை ஜார்ஜ் ஸ்பீட் விடுவிக்க வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், தீவு முழுவதிலும் ஸ்பீட் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். சுவாவிற்கு100 கிலோமீட்டர் வட கிழக்கில் உள்ள லெவுகா தீவில் உள்ள லாட்ஜ் ஒன்றை ஸ்பீட் ஆதரவுக்கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இதில் லாட்ஜ் முழுவதும் எரிந்து சாம்பலானது என்று ராணுவமேஜர் ஹோவர்ட் பொலிடினி கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கு விரோதமான லாட்ஜ் என்று கூறி அக்கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இதன்பிறகு லாட்ஜ் அருகிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சூறையாடவும் அக்கும்பல் முயன்றது. இருப்பினும்போலீஸார் எச்சரிக்கையாக சுட்டதால் அக்கும்பல் சென்று விட்டது.
ஏற்கனவே கொராவு என்ற தீவில், ஸ்பீட் ஆதரவாளர்கள் 300 பேர், ஒரு காவல் நிலையத்தைப்பிடித்து வைத்துள்ளனர். இங்கு 25 போலீஸார் சிக்கிக் கொண்டுள்ளன. இதேபோல, வெனுவா லேவுஎன்ற பகுதியை பண்ணைக்காரர்கள் பிடித்து வைத்துள்ளனர். இது பிஜியின் இரண்டாவது பெரிய தீவு என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications