தமிழகத்தில் இன்று
காணாமல் போன மீனவர்கள்:இந்திய தூதரகம் உதவுமா?
சென்னை:
காணாமல் போன திருச்செந்தூர் மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் காணப்பட்டால் அவர்களைமீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தமிழக அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 6.7.2000 அன்று திருச்செந்தூர் அமலி நகர் மீன்பிடி தளத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றுகாணாமல் போன திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்த 4 மீனவர்களையும், அவர்கள் சென்றகட்டுமரத்தையும் தேடி கண்டுபிடிப்பதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் நடவடிக்கைமேற்கொண்டுள்ளார்.
கடந்த 6ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வெளிப்பொருந்தும் இயந்திரம் மற்றும் பாய்மரம்பொருத்தப்பட்ட சி.சி.2563 பதிவு எண் கொண்ட கட்டுமரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், நசரேசன், வினோதன், கட்டய்யன் ஆகியோர் ஆழ்கடல்மீன் பிடிப்பிறகு (கணவாய் மீன்பிடிப்புக்கு) சென்றனர்.
வழக்கப்படி அவர்கள் 6ம் தேதி மதியம் 3 மணிக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அவர்கள் கரை திரும்பவில்லை என தூத்துக்குடி மீன் துறை உதவி இயக்குனரிடமிருந்து தகவல்பெறப்பட்டவுடன் காணாமல் போன மீனவர்களையும், படகையும் கடல் மற்றும் வான் வழியாகஉடனே தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மீன் பிடி படகுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் தொரடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்ஜெனீபர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் காணப்பட்டால் அவர்களை மீட்டு தக்கஉதவிகள் செய்து படகுடன் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள்மேற்கொள்ளுமாறு இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும்அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications