தமிழகத்தில் இன்று
"எல்லையில் வாலாட்டுவதை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு
குவைத்:
இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதை நிறுத்தும் வரையில் பாகிஸ்தானுடன் பேச்சு என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார். அங்கு இந்திய தூதர்பிரபு தயாளின் இல்லத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடந்தது. அங்கு கூடியிருந்த இந்தியர்களிடம் அவர் பேசுகையில், இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அவர்களுடன்பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இல்லை. காஷ்மீர் பிரச்சனையில்பாகிஸ்தானிடம் சரணடைய இந்தியா விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால். காஷ்மீர் குறித்துப் பேசத்தயாராக இருக்கிறோம். அதே போல, கராச்சி குறித்தும் பேச்சு நடத்தத் தயாராகவுள்ளோம்.
இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் துரிதமான, மிக வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்குக் காரணமாக உள்ளஇளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்.
செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது ஆயிரக்கணக்கில் இந்திய சாப்ட்வேர்என்ஜீனியர்கள் தேவைப்படுவார்கள். எனவே இதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா மட்டுமின்றி, சாப்ட்வேர் என்ஜீனியர் பற்றாக்குறையில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்றநாடுகளுக்கும் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications