தமிழகத்தில் இன்று
கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 167 பேரும் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோவையில் கடந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் இறந்தனர். இந்த சம்பவம்தொடர்பாக 167 அல் உம்மா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. திங்கள் கிழமையன்று 167 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளபாட்ஷா உட்பட 6 பேரையும் கோவை சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என நீதிபதி தணிகாசலம்உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். பாட்ஷாபத்திரிக்கை செய்தி ஒன்றில் முஸ்லிம் மக்களுக்கு நாட்டிலும், சிறையிலும் அநீதி இழைக்கப்படுவதாகதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications