தமிழகத்தில் இன்று
நாடாளுமன்ற தேர்தலுக்கு வெளிநாட்டு பார்வையாளர்கள் வர எதிர்ப்பு
கொழும்பு:
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள்வருவதற்கு இலங்கை தேர்தல் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் நிலைமையை நன்கு உணர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருப்பதையே தாங்கள்விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு மார்ச் மாதம் எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய அரசுஇலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தலை கூர்ந்து கவனித்து வருவதாக எழுதியிருந்தது.
இலங்கை தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகா சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்கூறியதாவது:
வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருவதில் சில சிக்கல்கள் உள்ளன. இலங்கை தேர்தலை, அவர்கள்நாட்டு தேர்தலோடு ஒப்பிட்டு அதைப் போல் நடத்த வேண்டுமென எதிப்பார்ப்பார்கள்.
இலங்கையின் பூகோளம், மொழி , பழக்கங்கள் மற்றும் அரசியல் நிலை பற்றி அறிந்தவர்கள்கண்காணிப்பாளர்களாக வருவதே சரியானது. வெளிநாட்டு பார்வாைளர்கள் எல்லா ஓட்டுச்சாவடிகளுக்கும் செல்ல முடியாது. அதனால் அவர்களது கண்காணிப்பு முழுமையானதாக அமையாது.
அக்டோபரில் நடை பெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கையின் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஆனால் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேவையான அளவுஅதிகாரங்கள் ஆணையத்திற்குத் தரப்படவில்லை .
தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் ஓட்டுச் சாவடிகளில் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தரப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் வாக்குப் பதிவின்போது, எப்போதுமே முறைகேடுகள், கள்ள ஓட்டுகள் நிறைந்திருக்கும்.ஐரோப்பிய அரசு தனது கடிதத்தில், வரவிருக்கும் தேர்தல்கள் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல்நியாயமான முறையில் நடைபெற வேண்டியது அவசியம் என கூறியுள்ளது.
மேலும், இலங்கையில் நடந்து வரும் இனக் கலவரம் குறித்தும் ஐரோப்பிய யூனியன் கவலைதெரிவித்துள்ளது. அதனால் பத்திரிக்கைகளின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாவும் அது தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications