தமிழகத்தில் இன்று
செயற்கைக் கோள் மூலம் சர்வீஸ் பயிற்சி அளிக்க மாருதி நிறுவனம் முடிவு
டெல்லி:
மாருதி கார்களை சர்வீஸ் செய்வது குறித்து செயற்கைக் கோள் மூலம் பயிற்சி கொடுப்பதற்காக இந்திரகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன்மாருதி உத்யோக் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் மாருதி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கத்தார் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.டபிள்யூ. கான்ஆகியோருக்கிடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகவுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் செயற்கைக் கோள் மூலம் மாருதி கார்களை சர்வீஸ் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். யு.ஜி.சி. வகுப்புகள்மூலமும் சர்வீஸ் செய்வது தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மாருதி நிறுவனம் தனது வேகன்-ஆர் வகைக் கார்களின் விற்பனையை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 70 சதவீதம் அதிகரிக்கத்திட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications