தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நிச்சயம் செய்த பெண்ணை மரத்தில் கட்டிவைத்துக் கொன்ற முறைமாமன்

சத்தியமங்கலம்:

நிச்சயதார்த்தம் செய்தபின் வேறு வாலிபருடன் சிரித்துப் பேசியதற்காக, பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொன்றார் முறை மாப்பிள்ளை.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சொக்கநந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள்தமயந்தி (18). தமயந்திக்கும், அவரது முறை மாப்பிள்ளை ராஜாராமுக்கும் (23) திருமணம் செய்து வைக்க பெரியோர்கள்விரும்பினர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதற்கிடையே சனிக்கிழமை ராஜாராம் தனது தோட்டத்திற்குச் சென்றார். அங்கு தமயந்தி, வேணுகோபால் என்ற வாலிபருடன்சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஆத்திரமடைந்த அவர் இருவரையும் பார்த்து கோபத்தில் கத்தினார். இதையடுத்துவேணுகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார்.

உடனே ராஜாராம் தமயந்தியை கண்மூடித்தனமாய்த் தாக்கினார். அப்படியும் ஆத்திரம் தீராத ராஜாராம், தமயந்தியை அங்கிருந்தவேப்ப மரத்தில் கட்டிவைத்தார். ஆத்திரம் தீரும் வரை அடித்து உதைத்தார். அந்த நேரத்தில் ராஜாராமின் பெற்றோர், மற்றும்அவரது உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்களும் தமயந்தியை தாறுமாறாக திட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட தமயந்தி, மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையிலேயே இறந்தார். தகவல் அறிந்தசத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமயந்தியின் உடலைக் கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக ராஜாராம், அவரது தந்தை முனுசாமி, உறவினர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+