தமிழகத்தில் இன்று
புலிகள் சாவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் 12 புலிகள் இறந்தது குறித்து ஆராயநியமிக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துமூன்று வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் துறை கூடுதல் ஐ.ஜி. எஸ்.சி.சர்மாவின் அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவீன் ரஹேஜா என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவை விசாரித்த தலைமை நீதிபதிஏ.எஸ்.ஆனந்த், நீதிபதி லஹோத்தி, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தஉத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தது.
நவீன் ரஹேஜா தனது மனுவில், மீதமுள்ள புலிகளையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நந்தன்கனான் விஷயம் மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.காடுகளில் உள்ள புலிகள் மட்டுமல்லாது, வனவிலங்கு பூங்காக்களில் உள்ள புலிகள் நலன் குறித்தும்நாம் கவலைப்பட வேண்டும்.
காடுகளில் புலிகள் இறந்தால் பெரிய விஷயமாகப் படாது. ஆனால் பாதுகாப்பான இடத்தில்வைக்கப்பட்டுள்ள புலிகள் இறப்பது மிகவும் மோசமானது. அதிர்ச்சியளிப்பது. 1984-ம் ஆண்டு முதல்இதுவரை இறந்த புலிகள் குறித்த பட்டியலை தனியார் தொலைக் காட்சி ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது.இது மிகவும் கவலை தருவதாக உள்ளது.
அலட்சியப் போக்கு காரணமாக இந்தப் புலிகள் இறந்திருந்தால், அதற்குக் காரணமானவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications