தமிழகத்தில் இன்று
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோருகிறார் நெடுமாறன்
மதுரை:
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கசெயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் நடந்த தமிழர் தேசிய இயக்க செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்டது நியாயமற்றது. அந்ததடையை நீக்க வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமான செயலாககருதப்படுகிறது.
1948-ல் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போதும், அதற்கு பின்பு 3முறை ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டபோதும் அதை எதிர்த்துகூட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. அதற்கு தாராளமாகஅனுமதியளிக்கப்பட்டது.
தமிழ் நாடு காவல் துறை ஈழ ஆதரவு கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் விதித்ததடை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகும் அதே நிலைதொடர்கிறது. ஈழ ஆதரவு துண்டறிக்கைகளையோ , சுவரோட்டிகளையோஅச்சடிக்கக்கூடாது என்று அச்சக உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர்.
இத்தகைய கருத்துரிமை பறிப்பு நடவடிக்கைகளை கண்டிக்க அனைத்து ஜனநாயகசக்திகளும் முன்வரவேண்டும். இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவியாக ரூ.450கோடி கொடுக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசுக்குகொடுக்கும் எந்த உதவியையும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு பயன்படுத்தும்என்பதை செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
காஷ்மீர் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தைசெயற்குழு வரவேற்கிறது. மாநில சுயாட்சி கட்சிகள் ஒன்று கூடி மாமநில சுயாட்சிக்குஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
விவசாய கடனுக்காக கெடுபிடி செய்வதையும் , ஜப்தி செய்வதையும் கண்டிக்கிறோம்.விவசாய கடனையும் , வட்டியையும் தள்ளுபடி செய்யவேண்டும் என தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
பிறகு நெடுமாறன் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையில் , தமிழ் ஈழம் அமைக்கவேண்டும் என்பதுதான் விடுதலைப்புலிகளின் குறிக்கோள், அதற்கு ஈடான மாற்றுதிட்டத்தை கூட இலங்கை அதிபர் சந்திரிகா இதுவரை கொடுக்கவில்லை. இலங்கைஅரசியல் சட்டப்படி, அங்கு ஒரு தமிழன் ஜனாதிபதியாக முடியாது.
சந்திரிகா இப்பொழுது அறிவித்துள்ள இலங்கை அரசின் சமரச திட்டத்தை, அவரதுஅரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் கூட ஏற்க மறுக்கின்றன. உலகத்தை ஏமாற்றவேசந்திரிகா இதை அறிவித்துள்ளார்என்றார் பழ.நெடுமாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications