தமிழகத்தில் இன்று
சந்திரிகா, விக்கிரமசிங்கே ஒப்பந்தத்தை நிராகரித்தது டி.யூ.எல்.எப்.
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபர் குமாரதுங்காவுக்கும், எதிர்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தமிழக ஐக்கிய விடுதலை முன்னணி நிராகரித்தது.
வடகிழக்கு மாகாண இடைக்கால கவுன்சில் அமைப்பது தொடர்பாக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஒப்பந்தம்கையெழுத்தானது.
தமிழர்கள் அதிகம் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதிகளில் இடைக்கால கவுன்சில் அமைப்பது, அதிகாரப்பகிர்வு உள்பட பல்வேறு திட்டங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் தமிழர் கட்சிகளுடன் திங்கள்கிழமை முதல் அதிபர் சந்திரிகா ஆலோசனை நடத்தத்துவங்கியுள்ளார். முதலில் தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சிப் பிரதிநிதிகள் அதிபருடன் பேச்சு நடத்தினர். இதன்படிஅதிபரின் வீட்டில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் சம்பத்நாதன், மூத்த துணைத் தலைவர்அனந்தசங்கரி, எம்.பி.பரராஜசிங்கம் ஆகியோர் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை திங்கள்கிழமை சந்தித்தனர்.
சந்திப்பின் போது நீதித்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பியாரிஸ், அமைச்சர்கள் இன்டிகாகுணவர்த்தனே, பட்டி வீரக்கூன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்பு குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி துணைத் தலைவர் அனந்த சங்கரி கூறுகையில், வடகிழக்குமாகாணத்தில் இடைக்கால கவுன்சில் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தஒப்பந்தப்படி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகாரப் பரவல் இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.
இடைக்கால கவுன்சில் அமைப்பதன் மூலம் அதிகாரப்பரவல் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் கூறுவது சரியல்ல.அரசு விடுதலைப்புலிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இலங்கைபோர் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications