தமிழகத்தில் இன்று
கொழும்பு:
நல்ல இயக்குநரும், சிறந்த சமுதாயக் கருத்தும் கொண்ட கதையும் கிடைத்தால் சிங்கள மொழித் திரைப்படத்தில் நடிக்கவும் தயார் என்று நடிகை ஷோபனாகூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள நாட்டிய கலா மந்திரின் மில்லினியம் விழாவான சித்ராம்பிரதம் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், திரைப்படத்தின் வெற்றிஎன்பது நல்ல அழகான நடிகரின் கையிலோ, அல்லது கவர்ச்சியான கதாநாயகியின் கையிலோ இல்லை. வெற்றியும், தோல்வியும் அப்படத்தின் இயக்குநரின்கையில்தான் உள்ளது. ஏனென்றால் இயக்குநர்தான் திரைப்படத்தின் கேப்டன் என்றார் ஷோபனா.
நடிகை ஷோபனா இதுவரை மலையாளம், தமிழ் உள்பட 225 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1994- ம் வருடம் மனிச்சித்திரத்தாழ் மலையாளத்திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருது வாங்கியுள்ளார்.
அவரிடம் சிங்களத் திரைப்படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்ட போது, நான் சிங்கள திரைப்படத்தில் நடிக்கத் தயாராக உள்ளேன்.ஆனால் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்க வேண்டும். அதை முதலில் பார்த்தபிறகு முழு திருப்தியிருந்தால் மட்டுமே நடிப்பேன். அதைவிட முக்கியமாக படத்தின்இயக்குநர் திறமையானவராக இருக்க வேண்டும் என்றார்.
இலங்கையில் வாழும் மக்களை நேசிப்பதாகவும், அவர்களது உணவு முறை, இயற்கை ஆகியவை எழில் கொஞ்சும் கேரளத்தை நினைவூட்டுவதாகவும்தெரிவித்தார்.
அவரிடம் நடிகர்கள் விருதுகள் வாங்கும் அளவுக்கு நடிகைகள் விருதுகள் வாங்கவில்லையே என்று கேட்ட போது, அப்படியொன்றும் இல்லை.பெரும்பாலான நடிகைகள் விருதுகள் வாங்கியுள்ளார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகம் வெளியாவதில்லை என்றார்.
இரண்டு ஹிந்திப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தும் கூட அதைத் தவிர்த்து விட்டேன். என்னை பிரபலப்படுத்திய மலையாள மொழிப் படங்களில் நடிப்பதையேவிரும்புவதாகத் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications