தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விம்பிள்டனை கலக்கிய வில்லியம்ஸ் சகோதரிகள்
லண்டன்:
விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் வென்றுள்ளனர்.
திங்கள்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள், 6-3, 6-2 என்ற நேரடி செட்களில் ஜூலி டெகுகிஸ், அய் சுகியாமா ஜோடியைவீழ்த்தினர்.
மழை காரணமாக இந்தப் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒற்றையர் இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ்,டேவன்போர்ட்டை வென்று சாதனை படைத்திருந்தார். அதே கையோடுஇப்போது இரட்டையர் பட்டத்தையும் தனது சகோதரியோடு சேர்ந்து வென்றுள்ளார்.
வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு இது மூன்றாவது இரட்டையர் கிரான்ட்ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியபட்டங்களை இவர்கள் வென்றிருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications