தமிழகத்தில் இன்று
அஸ்ஸாமில் யானைகளின் அட்டகாசத்திற்கு 50 பேர் சாவு
நியுமலிகார்(அசாம்):
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அசாமில் மதம் பிடித்த யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த வருடம் மட்டும் அசாமில் மதம் பிடித்த யானைகள் மிதித்ததில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கேவாழும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் பீதியில் வாழ்கிறார்கள்.
கவுஹாத்தியிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோல்காட் மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 15 பேர்யானைகள் மிதித்து இறந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் எப்போது யானைகள் வந்து எங்களைகொல்லுமோ என்ற பயத்திலேயே பெரும்பாலான இரவுகள் எங்களுக்கு தூங்காத இரவுகளாகவே கழிகின்றனஎன்கிறார் தேயிலைத் தோட்ட தொழிலாளி ராஜாராம்.
மனிதர்களை உயிரோடு கொல்லும் இந்த யானைகள் குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் எக்காகூறுகையில், காட்டில் உள்ள 5500 யானைகளில் மதம் பிடித்த யானைகள் மிதித்து பலர் உயிரிழக்கிறார்கள். கடந்தவாரம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே தெருவோர நாடகம் பார்த்து விட்டு வந்த 3 பேர் யானைகள் மிதித்துஇறந்துள்ளனர் என்றார்.
வனத்துறை பாதுகாவலர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், காட்டில் மதம் பிடித்து திரியும் யானைகளைஅடக்குவதற்கும், அவற்றை கிராமத்தின் அருகில் வர விடாமல் தடுப்பதற்கும் எங்களால் முடிந்த அளவு முயற்சிகள்எடுத்து விட்டோம். நாங்கள் இப்போது நம்பியிருப்பது எங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலைத்தான்.
பட்டாசுகளை வெடித்தும், வானில் துப்பாக்கியால் சுட்டும், யானைகளை விரட்டும் முயற்சியில் இறங்கினோம்.ஆனால் ஒரு முயற்சியுமே பலன் கொடுக்கவில்லை என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
கோல்காட் மாவட்டத்தில் வசிக்கும் குஷால்சர்மா என்பவர் கூறுகையில், இங்கே அண்மையில் எண்ணெய்சுத்திகரிப்பு ஆலை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஆலை கட்டியதால் காட்டுப்பகுதிகளை அழிக்க வேண்டியிருந்தது.அதனால் தான் காட்டுப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
மதயானைகளை முரசு கொட்டி விரட்டி விடலாம் என்றாலும் பண்டிகைக் காலங்களில்தான் முரசு கொட்டுவார்கள்என்று எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் யானைகள் புத்திசாலித்தனம் உள்ளவைகளாக இருக்கின்றன என்றார்குஷால் சர்மா.
இதைப்பற்றி ஏக்நாத் என்பவர் கூறுகையில், யானைகள் மனிதர்களை மட்டும் கொல்வதோடு நிறுத்திக்கொள்ளமால்நெற்பயிர்கள், சோளப்பயிர்கள், குடிசை வீடுகள் ஆகியவற்றையும் அழித்து நாசப்படுத்தியுள்ளன.
மேலும் அசாம் வன இலாகாவினர் 1972 ல் உருவாக்கப்பட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு சட்ட விதிகளுக்குஉட்பட்டு 5 அடி உயரத்திற்குக் குறைவான உயரமுள்ள யானைகள், பெண் யானைகள் ஆகியவற்றைத் தவிர்த்துமதம் பிடித்து திரியும் பிற யானைகளை பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications