தமிழகத்தில் இன்று
பெங்களூரில் கிளை துவக்குகிறது நாஸ்டாக்
பெங்களூர்:
அமெரிக்காவின் முன்னணி பங்குச் சந்தையான நாஸ்டாக், பெங்களூரில் தனது கிளையைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரில் தனது சேவையைத் துவக்க நாஸ்டாக் முடிவு செய்துள்ளது.
நாஸ்டாக்கில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதால் பெங்களூரில் தனது சேவையைஏற்படுத்த நாஸ்டாக் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
நாஸ்டாக் தலைவர்ஆல்பிரட் பெர்க்லி, புதிய கிளை தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேசியுள்ளார். சமீபத்தில் பெர்க்லி பெங்களூர்வந்திருந்தார். பெங்களூரில் உள்ளஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்திருந்தார்.
பெங்களூர் கிளை அலுவலகத்திற்கு கான்ஷியாம் தாஸ் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் எஸ்.எம்.கிருஷ்ணா,அமெரிக்கா செல்லவிருக்கிறார். அப்போது இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
1971-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி நாஸ்டாக் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள 5500 நிறுவனங்கள் நாஸ்டாக்கில் உறுப்பினர்களாகஉள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications