தமிழகத்தில் இன்று
காவிரி ஆணையக் கூட்டத்திற்காக டெல்லி செல்கிறார் கருணாநிதி
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி நாளை 13ம் தேதி மாலை டெல்லி செல்கிறார்.
14 மற்றும் 15 ஆகிய தேதிகள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள குழப்பங்கள் குறித்தும் பிரதமர்வாஜ்பாயுடன் பேசுகிறார்.
தமிழகம் - கர்நாடகம் இடையிலான காவிரிநதி நீர் பிரச்னை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் தலைமையில் காவிரிஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையக் கூட்டம் 14ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக 13ம் தேதி வியாழக் கிழமை மாலை முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். 14ம் தேதி காவிரி ஆணையக் கூட்டத்தில்பங்கேற்கும் அவர் மாலையில் பிரதமர் வாஜ்பாயை தனியாக சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிலவரம் பற்றியும், குறிப்பாக வாழப்பாடி ராமமூர்த்திக்கும், டாக்டர் ராமதாசுக்கும்இடையில் நீடிக்கும் மோதல் குறித்தும் பிரதமரிடம் அவர் விவாதிக்கிறார். மேலும் இலங்கை பிரச்னையில் இக்கட்சிகள் எடுத்துள்ள நிலை குறித்தும்விவரிக்கிறார்.
மறுநாள் 15ம் தேதி தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிலும் முதல்வர் கருணாநிதி பங்கேற்றுப்பேசுகிறார்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் 15-ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications