தமிழகத்தில் இன்று
ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி மூலம் மட்டுமே சீர்திருத்தம் மேற்கொள்ள முடியும். ஜனநாயகத்தைக் கொண்டு வருவது என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.
ராணுவப் புரட்சிக்குப்பின் கலைக்கப்பட்ட சட்டசபைகளை மீண்டும் கொண்டு வர முடியாது, டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் இதர அதிகாரிகளைமீண்டும் பதவியில் அமர்த்த முடியாது என்றும் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் பெர்வீஸ் முஷாரப். இதையடுத்து மாநில சட்டசபை சட்டசபைகள் கலைக்கப்பட்டன. அமைச்சர்கள்பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்களா என்று முஷாரப்பிடம் கேட்டபோது, கண்டிப்பாக நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதவிகொடுக்கப்படாது. அப்படி கூறப்படுவது வெறும் வதந்தி.
சில மாகாண சட்டசபை அமைச்சர்கள் என்னிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்களுக்கு மீண்டும் பதவி கொடுக்கப்படும் என்று வதந்தியைபரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல்.
சிலர் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். அது கண்டிப்பாக நடக்காது. ராணுவ ஆட்சி மூலம் தான் நாட்டைசீரமைக்க முடியும் என்றார்.
முன்னதாக ராஜா அப்ரூல் ஹக், மொய்ன் அசார், மேக்தும் அமீம் பஹீம், மவுலானா ரஹ்மான், அஜ்மல் கட்டாக் ஆகிய கலைக்கப்பட்ட சட்டசபைகளின்அமைச்சர்கள், முஷாரப்பைச் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைக் கழகம், பாகிஸ்தானில் அமைதிக்கும், உரிமைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு ராணுவ ஆட்சி விதித்துள்ளவரைமுறைகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications