தமிழகத்தில் இன்று
இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் சகஜம்!
டெல்லி:
ஜனதாதளம் மீண்டும் ஒருமுறை உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனதாதளம் முதல் முறையாக வி.பி.சிங் காலத்தின்போது உடைந்தது. அதன் பிறகுபிளவுகள், அதன் அரசியல் வாழ்வில் சகஜமானது. இப்போது மீண்டும் ஒருமுறைஉடைய ஜனதாதளம் தயாராகி வருகிறது.
தற்போதைய ஜனதாதளம் ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் என இருஜனதாதளமாக உள்ளது. இதில் பிளவைச் சந்திக்கப் போவது ஐக்கிய ஜனதாதளம்.
ஜூலை 24-ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது.அதற்கு முன்பு கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தச் சமயத்தில்கட்சி உடையும் என்று இக்கட்சியின் எம்.பி.ராம் சந்திர பாஸ்வான் கூறியுள்ளார்.
தற்போது மொத்தம் 10 எம்.பிக்கள் இக்கட்சிக்கு உள்ளனர். இவர்களில் சரிபாதியாகபிரிவின்போது பிரிவார்கள் என்று கூறுகிறார் பாஸ்வான். இவர்கள் தவிர, சமதாக் கட்சிமற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்களும் தங்களுடன் தொடர்புவைத்திருப்பதாக பாஸ்வான் கூறுகிறார்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து புதிய கட்சியைத் துவக்கவுள்ளதாகவும் பாஸ்வான்தெரிவித்தார். இந்த பாஸ்வான் வேறு யாருமல்ல, மத்திய தகவல் தொடர்புத் துறைஅமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பிதான்.
இந்த வாரத் துவக்கத்திலேயே தான் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி துவக்கப்போவதாக ராம் சந்திர பாஸ்வான் கூறியிருந்தார். தலித் சேனா அமைப்பின் அகிலஇந்திய துணைத் தலைவராக பாஸ்வான் இருக்கிறார். இதையே இப்போது அரசியல்கட்சியாக பாஸ்வான் மாற்றுவார் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications