தமிழகத்தில் இன்று
கே: ம.தி.மு.க,,புலிகளை ஆதரிப்பது எனக்குத் தெரியாது என்று ஜார்ஜ்ஃபெர்ணாண்டஸ் கூறியுள்ளாரே...?
ப: அருகில் இருப்பவர் செய்யும் காரியத்தையே அறியாத பாதுகாப்பு அமைச்சர்,அடுத்த நாடாகிய பாகிஸ்தான் செய்வதை எல்லாம் எப்படித்தான் அறிந்துகொள்வாரோ! பயமாக இருக்கிறது.
கே: தமிழீழம் மலர்ந்தால் தெற்காசியாவில் அமைதி ஏற்படும் - என்றுகருணாநிதி துணிந்து அறிவிக்க வேண்டும் என்று ராமதால்வலியுறுத்தியுள்ளாரே...?
ப: இந்த முடிவை, ஓர் அதிகாரத்துடன் சொல்லும் நிலையில் இருப்பவர் பிரதமர்.ஆகையால் வாஜ்பாய் அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டிருக்கலாமே?வாஜ்பாயுடன் தகராறு செய்து கொள்ள அவர் விரும்பவில்லை.
கே: இலங்கைப் பிரச்சனையில் பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்றுவைகோ அறிவித்துள்ளாரே?
ப: எப்போதிலிருந்து ?அதை அவர் சொல்லவில்லையே!
கே: தி.மு.க.வையும், ம.தி.மு.க. வையும் ஒரே கட்சியாகத் தான் கருதுகிறேன்என்கிறாரே முதல்வர் கருணாநிதி?
ப: எதிர் காலத்தில் இரு கட்சிகளும் ஸ்டாலினைத்தானே தலைவராக ஏற்க வேண்டும்:வைகோவின் எதிர்கால கனவுகள் மறக்கப்பட வேண்டும்- என்று பொருள் காண்க.
கே; ஈரோடு ம.தி.மு.க.மாநாட்டில், இலங்கைப் பிரச்சனையில் வாஜ்பாய் அரசின்நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பற்றி...?
ப: பா.ஜ.க. அரசு இலங்கைப் பிரச்சனையில் தனது அணுகுமுறையை மறுபரிசீலனைசெய்ய வேண்டும் - என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
கே: ம.தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டது தவறு என்றுஜெயலலிதா கூறியிருப்பது சரிதானா?
ப: சரிதான். கருணாநிதி, அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்தமாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்க வேண்டும்.
கே: மக்கள் கருத்து என கருத்துக் கணிப்பைத்தானே வெளியிட்டிருக்கிறீர்கள்?அன்றாட நிகழ்ச்சிகளினால் மக்களின் மனம் மாறும் போது, கருத்துக் கணிப்புபயனற்றதாகி விடும் என்ற கருத்து பற்றி...?
ப: இன்றைய நிலையில் மக்கள் கருத்து எப்படி இருக்கிறது என்று தெரிவிப்பது தான்,இப்போது நாங்கள் வெளியிட்ட விவரம்.
தேர்தல் நெருங்கிற போது, மக்கள் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய, அந்தநேரத்தில் மீண்டும் இந்த முயற்சியைச் செய்வோம்.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மாறுதலைத் தெரிந்து கொள்ளவும், அதற்கானகாரணங்களை ஓரளவாவது புரிந்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறோம்.
கே: காஷ்மீருக்கு சுயாட்சி அளித்தால் பஞ்சாப், அஸ்ஸாம், தமிழ்நாடு போன்றமாநிலங்கள் சுயாட்சி கோஷத்தைக் கிளப்பும் என முன்னாள் பிரதமர் சந்திரசேகர்கூறியுள்ளாரே?
ப: சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
கே: ஊழல் குற்றச்சாட்டு, பெருந்தலைவர்களை ஓரம் கட்டுதல், ஒரு குறுகியவட்டம் ... என பலவீனங்கள் பல இருந்தும், ஜெயலலிதாவுக்கு செல்வாக்குஇன்னமும் குறையாமல் இருப்பது எதைக் காட்டுகிறது?
ப: தமிழகத்தில் தி.மு.க. எதிர்ப்பு கணிசமான அளவில் இருக்கிறது என்பத்ைதான்காட்டுகிறது.
கே: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு, வைகோவும், டாக்டர்ராமதாசும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் பேச்சுகளை கேட்கும்போது, இவர்களை விட ஜெயலலிதா எவ்வளவோ மேல் என தாங்கள்எண்ணியதுண்டா?
ப: இந்த விஷயத்தில் ஜெயலலிதா மேல் - என்று நான் நினைப்பது உண்மையே.
கே: காஷ்மீர் அரசை கலைத்து விடுவதன் மூலம், மாநில சுயாட்சி கோரிக்கையைஅமுக்கி விட முடியுமா?
ப: முடியாது. ஃபரூக்கை தியாகி ஆக்க முடியும். அவ்வளவு தான். இன்னமும் காஷ்மீர்மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற முடியாமல் இருக்கிற ஃபரூக்கிற்கு, டிஸ்மிஸல்ஒரு நல்ல டானிக்காக அமையும்.
கே: ஊழல் ஒரு பெரிய விஷயமில்லை என்று கம்யூனிஸ்ட்கள் கருதக் காரணம்?
ப: ரஷ்யாவிலும். சைனாவிலும் ஊழல் இருப்பதால், அது இந்தியாவிலும் இருப்பதுபற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
கே: அரசியல் பேசும் போது சோவின் கருத்துக்களைக் கூறினால், உடன்இருப்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்களே?
ப: எந்த மாதிரியாகப் பார்த்தால் என்ன? என் கருத்தைக் கூறிய பிறகும், உங்களைமற்றவர்கள் ஏறெடுத்துப் பார்க்கிறார்கள் என்பதே பெரிய விஷயம் அல்லவா?முகத்தை திருப்பிக் கொண்டு விடுவார்கள் என்றல்லவா நினைத்தேன்!
கே: பத்திரிக்கை சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் - வித்தியாசம் என்ன?
ப: நடக்கிறதை அப்படியே சொல்லும் உரிமை கேட்பது - பத்திரிக்கை சுதந்திரம்,சொல்வது அப்படியே நடக்க வேண்டும் - என்று கேட்பது பெண்கள் சுதந்திரம்.
கே: விடுதலைப் புலிகளை ம.தி.மு.க.ஆதரிக்கவில்லை என்று வெங்கையாநாயுடு கூறியிருப்பதைப் பற்றி...?
ப: ஃபெர்ணாண்டஸே மேல்! தெரியாது என்று சொல்லி விட்டார். வெங்கையாநாயுடு,துணிந்து பொய் சொல்கிறார்.
கே: சேவை மனப்பான்மை அதிகரித்து விட்டதால்தானே, ஆட்சி அமைக்கஎல்லா கட்சிகளும் இப்படி போட்டி போடுகின்றன?
ப: ஆமாம். தங்கள் குடும்பங்களில், பல தலைமுறைகளுக்கான சேவையை, ஒரு சிலவருடங்களிலேயே செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம், பல கட்சிகளில்உள்ளவர்களுக்கும் அதிகரித்து விட்டது.
கே: எதையும் தாங்கும் இதயம் பெற என்ன செய்ய வேண்டும்?
ப: எதையும் வாங்கும் பர்ஸ் ஒன்றைப் பெற வேண்டும். அந்த மாதிரி வசதிகிட்டிவிட்டால், பணம் தருகிற தைரியத்தில், இதயம் எதையும் தாங்கும் சக்தி பெற்றுவிடும்.
கே: ம.தி.மு.க. வின் மாநாட்டில் அத்வானி கலந்து கொண்டது பற்றி குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்க வேண்டும் என்கிறாரே ஜெயலலிதா?
ப: அத்வானியிடம் விளக்கம் கேட்காததது பற்றி,குடியரசுத் தலைவரிடம் ஐ.நா. சபைபொதுக் காரியதரிசி விளக்கம் கேட்க வேண்டும் - என்று அடுத்த அறிக்கையும் வராமல்இருந்தால் சரி.
கே: ஈரோடு மாநாடு ம.தி.மு.க. வுக்கு எந்த வகையில் உதவும்?
ப: தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக உழைப்பது, எந்தவித சங்கடத்தையும்ஏற்படுத்தாது - என்ற துணிவை, ம.தி.மு.க. தொண்டர்கள் பெற, இந்த மாநாடுநிச்சயமாக உதவும்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications