தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் மாநில சட்டசபை நிறைவேற்றிய சுயாட்சி தீர்மானத்தை, ஏற்கத்தகாதது என்று கூறி , மத்திய அமைச்சரவை நிராகரித்திருக்கிறது, இந்தவிவகாரத்தின் விபரீதத்தன்மை, நேரம் கழித்தாவது மத்திய அரசுக்கு உறைத்தது பற்றி மிகழ்ச்சியே.

சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பிரதமர், இது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று கூறியதாக செய்தி வந்தது: பின்னர் இதுமறுக்கப்பட்டது.

ஆனால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு சர்வ சாதாரணமான நிகழ்ச்சி போல பிரதமர் அதைப்பற்றி கருத்து தெரிவித்தார் என்பதுமறுப்பதற்கில்லை.

உள்துறை அமைச்சர் அத்வானியோ இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று கூறினார். மத்திய அரசின் மெத்தனம் அதிர்ச்சி தருவதாகஇருந்தது.

ஒரு மாநில சட்டசபை இந்த மாதிரி தீர்மானத்தை நிறைவேற்றுவதால், உடனடியாக அந்த மாநிலத்திற்கு சுயாட்சி வந்து விடப்போவதுமில்லை; அரசியல்சட்டத்தில் எந்த மாறுதலும் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை.

ஆனால், இம்மாதிரி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்பொழுது

உணர்ச்சிகள் தூண்டிவிடப்படுகின்றன; இது பற்றிய விவாதம் நடக்கிற போது நிதானம் தவறிய பேச்சுக்களும், அறிக்கைகளும் மலிந்து விடுகின்றன.

இந்த மாதிரி கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்பொழுது, சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது போல தோற்றம்ஏற்படுத்தப்படுகிறது.

இதனால் எல்லாம் பிரிவினைவாதிகளுக்கெல்லாம் ஒரு வசதியான மேடை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஆகையால்தான் இம் மாதிரி விஷயங்களைஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

ஃபரூக் அப்துல்லா சட்டசபையில் சுயாட்சி தீர்மானம் கொண்டு வரப் போகிறார் என்பதும், அது அனேகமாக நிறைவேற்றப்படும் என்பதும்பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து கொண்டிருந்த பொழுது, மத்திய அரசு தூங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்திலேயே அவரை அழைத்து கடுமையாக எச்சரித்திருந்தால் இது தடுக்கப்பட்டிருக்கலாம்.

அந்த மாதிரி முயற்சி எதையும் மத்திய அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. இப்போதும் கூட என்ன செய்கிறார்கள்? கூடுதல் அதிகாரங்கள் கேட்டால்கொடுக்க வேண்டியதுதான் என்று கூறி, பிரிவினைவாதிகளை தாஜா செய்கிறார்கள்.

என்ன கூடுதல் அதிகாரம் வேண்டிக் கிடக்கிறது?

இருக்கிற அதிகாரத்தை வைத்துக் கொண்டு இதுவரை என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

சொல்லப் போனால் மற்ற பல மாநிலங்களை விட காஷ்மீருக்குத்தான் மத்திய அரசு நிறைய நிதியை ஒதுக்கி வருகிறது.

கண்ட பலன் என்ன? பூஜ்யம்தான். கெஞ்சிக் கேட்டும். தாஜா செய்தும் தீவிரவாதத்தை அடக்க முடியும் என்று தோன்றவில்லை.

சட்ட விரோதமான செயல்களையும்.சமூக விரோத நடவடிக்கைகளையும், பேசிப் பேசியே நிறுத்திவிட முடியும் - என்ற ஒரு தத்துவம் இன்றைய அரசியலில்புகுந்து விட்ட ஒரு வக்ரம். இது நம் நாட்டில் நன்றாகவே ஸ்வீகரிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிற, அரசியல் சட்டத்தின் 370-வது ஷரத்து போக வேண்டும் என்று கூறி வந்த பா.ஜ.க., இப்போது காஷ்மீர்விஷயத்தில் தடுமாறுவது வருந்தத்தக்கது.

தீவிரவாதிகளுடன் பேசுகிறோம் என்று வேறு சொல்கிறார்கள். இப்படி பேசுவதால் ஒரு நல்ல பயனும் விளையும் என்று தோன்றவில்லை.தீவிரவாதத்திற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். அது எப்போது நடக்க வேண்டும்?

அவர்கள் நாங்கள் தீவிரவாதத்தை விட்டு விட்டோம். இனி ஆயுதம் ஏந்த மாட்டோம் என்ற உத்திரவாதத்தை அளித்து, தங்கள் ஆயுதங்களையெல்லாம்அரசிடம் ஒப்படைத்து, அதற்கு பிறகு பேச்சு வார்த்தைக்கு வந்தால் அப்போது அதில் அர்த்தமிருக்கும்.

அதை விட்டு விட்டு, நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்துவோம், வாருங்கள் என்று தீவிரவாதிகளை அழைப்பது அரசின் பலவீனத்தைத்தான்காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+