தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர் மாநில சட்டசபை நிறைவேற்றிய சுயாட்சி தீர்மானம் பற்றி, அரசு முதலில் காட்டிய அணுகுமுறைகளுக்கும் இதே பலவீனம்தான் காரணம்.இந்த பலவீனத்தை பா.ஜ.க. கை விடுவது நல்லது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு தடுமாறியும் கூட, இதனால் பா.ஜ.க. பெரிதாகப் பாதிக்கப்பட்டு விடாது என்றே தோன்றுகிறது. அதற்குஇரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று - ஒரு கட்சி என்கிற முறையில் பா.ஜ.க. இந்த சுயாட்சி தத்துவத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறது,

இரண்டாவது காரணம் - எதிர்க் கட்சிகள், மத்திய அரசை விட அதிகமாகக் குழம்பிப் போய் கிடக்கின்றன.

மத்திய அரசு இந்த சுயாட்சி கோரிக்கையை நிராகரித்துவிடும் என்று காங்கிரஸ் எதிர் பார்க்கவில்லையோ என்னவோ? அதனால் கோபத்தில் ஒருஅறிக்கை விட்டிருக்கிறது.

மத்திய அரசினால் தூண்டப்பட்டுதான் ஃபரூக் அப்துல்லா இந்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி இருக்கிறார் என்று கூட தோன்றுகிறது என்றுகாங்கிரஸ் அறிக்கை கூறுகிறது.

காஷ்மீர் சட்டசபையில் கோரிக்கையை இப்படி ஒரேயடியாக நிராகரித்திருக்கக் கூடாது என்று வி.பி. சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியோ பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதை ஏற்பதற்கில்லை என்றாலும், சுயாட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றுகூறியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, காஷ்மீர் சட்டசபை நிறைவேற்றிய சுயாட்சி தீர்மானம் அல்ல பிரச்சனை - காஷ்மீருக்கு சுயாட்சி என்பது தான்விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனை.ஆகையால் மத்திய அரசு இந்த கோரிக்கையை இப்படி முழுமையாக நிராகரித்திருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறது.

ஏன் இப்படி எல்லா கட்சிகளுமே தடுமாறுகின்றன? மற்ற மாநிலங்களைப் போலவே காஷ்மீரும் நம் நாட்டில் ஒரு மாநிலம்தான் - என்று எந்தக்கட்சியுமே இன்னமும் முழுமையாக நம்பவில்லை.

எதையாவது கொடுத்து, எப்படியாவது கெஞ்சி, எதற்காவது ஒப்புக் கொண்டு,ஏதாவது பேரம் நடத்தி, நம் நாட்டோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டியஒரு பிரதேசமாகத்தான் காஷ்மீரை எல்லா கட்சிகளுமே நினைக்கின்றன.

வெளியே சொல்லப்படாத இந்த மனப்பான்மையினால்தான்,காஷ்மீர் பேச்சு வரும் போதெல்லாம் அனைத்து கட்சிகளுக்குமே தடுமாற்றம்ஏற்படுகிறது. காஷ்மீர் நம்முடையதுதான் என்று நாம் நம்ப ஆரம்பித்தால் ஒழிய, இந்தக் குழப்பங்கள் தீரப்போவதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+