தமிழகத்தில் இன்று
கட்சி தொடங்குகிறார் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்
மதுரை:
பதவி எதுவும் கொடுக்காமல் அதிமுகவில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகஇருந்தவர் கண்ணப்பன். அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மிகுந்தநம்பிக்கைக்குரிய நபராக இருந்த கண்ணப்பன், இப்போது ஜெயலலிதாவை குற்றம் சாட்டியுள்ளார். அவரதுசெயல்பாடுகள் பிடிக்காமல் போனதால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
முன்பு ஒரு முறை கட்சியிலிருந்து விலகிய கண்ணப்பன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜாராம்,அழகுதிருநாவுக்கரசு, முத்துசாமி ஆகியோருடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அது நெடுநாட்கள்நீடிக்கவில்லை. இதையடுத்து அழகுதிருநாவுக்கரசும், கண்ணப்பனும் மதிமுகவில் இணைந்தனர். அங்கும்அவர்களுக்குப் பதவி எதுவும் கொடுக்காததால் அவர்கள் அதிலிருந்து விலகி மீண்டும் அதிமுக வில் இணைந்தனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் இவர் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட எண்ணினார். ஆனால் தொகுதிகாங்கிரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இதனால் வருத்தமுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.
முதுகுளத்தூரில் நடந்த விழா ஒன்றில் யாதவர் சங்கம் என்ற புதிய அமைப்பின் கட்டடத்தைத் திறந்து வைத்துப்பேசுகையில், விரைவில் யாதவர்கள், முத்தரையர்கள், நாடார்கள் ஆகியோரை வைத்து தனிக்கட்சி ஒன்றைத்துவக்கப் போவதாக அறிவித்தார். புதிய கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும் கண்ணன்கூறினார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications