தமிழகத்தில் இன்று
தாய் தந்தை சண்டையால் உயிர் துறந்த மகள்
சென்னை:
தினம் சண்டை போடும் தாய் தந்தையை பார்த்து மனம் வெறுத்த மகள் தற்கொலைசெய்து கொண்டார்.
"நான் இறந்த பிறகாவது ஒற்றுமையாக இருங்கள் என்ற உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு உயிர் துறந்தார்.
அந்த அப்பாவி மகளின் பெயர் கோமதி. வயது 17. பெற்றோர் போட்ட சண்டையால்படிப்பை பாதியில் விட்டவர். கோமதியின் தந்தை ஜெயராமன். தாயார் தமிழரசி.சென்னை ராமாபுரம் பாரதிசாலையில் ஒத்துவராத தம்பதியாக இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஆகாத மனைவி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற பழமொழிக்கேற்பஇவருக்கும் இடையே தினம் அடிதடி தான்.
மற்ற குடும்பங்கள் மாதிரி இல்லை; கணவன் அடிக்க மனைவி வாங்கிக் கொண்டுகூச்சல் இடும் ரகமல்ல தமிழரசி. சரிக்கு சரி நின்று கணவரை தாக்குவாராம். இதைஅக்கம் பக்கத்தவர் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்களாம்.
ஏழை வீட்டுச் சண்டை எல்லாம் வீதியில் தானே. அடிப்பதும் உதைப்பதும்,மானங்கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்ச்சிப்ப்பதும் ஜெயராமனுக்கும்,தமிழரசிக்கும் பழகிப் போன ஒன்றாகிப் போனது. அதனால் அவர்கள் இருவரும்மகளை பற்றியும், அவரது மனநிலை பற்றியும் துளியும் கவலை கொள்ளவில்லை.
ஆனால், நாள் தோறும் நடக்கும் சம்பவங்களால் துடித்துப் போன கோமதி,நாளடைவில் வெளியில் தலை காட்டவே தயங்கினார். அக்கம் பக்கத்தில் வசிக்கும்பிள்ளைகளின் கேலிக்கு ஆளானதால் தான் ஏற்பட்ட பாதிப்பு அவரை வீட்டுக்குள்முடக்கி விட்டது. அதற்கு என்ன காரணம் என்று கூற அறிய முற்படாத அந்தபடிப்பறிவில்லாத பெற்றோர்களால் சண்டையை நிறுத்த முடியவில்லை.
சம்பவத்தன்றும் அப்படித் தான். உப்பு பெறாத ஒரு விஷயத்திற்காக தாயும், தந்தையும்அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அம்மாவை அப்பா அடிக்க, அப்பாவைஅம்மா திருப்பி அடிக்க "இந்தியா - பாகிஸ்தான் சண்டைக் காட்சி மாதிரிபோர்க்களமாகி விட்டது வீடு.
சண்டை போட்ட களைப்பில் அம்மா ஒரு புறம், அப்பா ஒரு புறம் படுத்துக்கொண்டனர். ஆனால், அந்த இரண்டு பேருக்கும் வீட்டில் இருக்கும் மகளின்நினைப்பே இல்லை. மாலையில் மகளை தேடியபோது தான் அதிர்ச்சி அவர்களுக்குகாத்திருந்தது.
சமையல் அறை கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. தட்டிப் பார்த்தும் திறக்காததால்உடைத்து உள்ளே புகுந்த போது உத்திரத்தில் தொங்கிய கயிற்றில் பிணமாக கிடந்தார்கோமதி. கைப்பிடியில் ஒரு துண்டுக் காகிதம். அதில் இருந்தது தான் இந்த வாசகம்:
""இனியாவது சண்டை போடாமல் இருங்கள். நான் இறந்த பிறகாவது நீங்கள் இரண்டுபேரும் ஒற்றுமையாக வாழுங்கள்...
இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications