தமிழகத்தில் இன்று
நூல் வாங்குவதை நிறுத்துகிறார்கள் கோவை விசைத்தறியாளர்கள்
கோவை:
நூல் விலை ஏற்றத்தைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள விசைத் தறிகள்சனிக்கிழமை முதல் நூல் வாங்குவதை நிறுத்துகின்றன. இதனால் கோவைமாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், பலகோடி ரூபாய் உற்பத்தியும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் செயலர் முருகசாமிகூறியதாவது:
கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் (பவர்லூம்ஸ்) சங்கத்தின் உறுப்பினர்களாக300 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூரில் மட்டும் 250உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், மில்களிடமிருந்து நூல்வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், சேமனூர், திருப்பூர், பல்லடம்பகுதியில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டதுணிகள் தேக்கமடைந்துள்ளன.
சர்வதேச மார்க்கெட்டில் விசைத்தறியில் உற்பத்தியாகும் துணியின் விலையை சீனா,மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு விலை குறைப்புசெய்துள்ளன. எனவே, இதனை ஈடுகட்டும் அளவிற்கு போட்டி விலைக்கு நம்மால்வழங்க வேண்டுமானால், உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள நூல் விலை உயர்வு தொடருமானால் நம்மால் உற்பத்திசெலவை குறைக்க டியாது. சோமனூர் பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு 15 கோடிமீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் நூல் விலையில் கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதால்நூல் வாங்குவதை முடிவு செய்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 20எஸ் எனப்படும் ரக நூலின் விலை 50 கிலோவிற்கு ரூ.4,800 ஆக இருந்தது. தற்போதுஇதன் விலை ரூ.5,250 ஆக உயர்ந்துள்ளது.
40 எஸ் என்ற வகை நூல் 4 ஆயிரத்து 700 லிருந்து 5 ஆயிரத்து 200 ஆகஉயர்ந்துள்ளது. எனவே, இந்த திடீர் நூல்விலை உயர்வைக் கண்டித்து இன்று முதல்விசைத்தறியாளர்கள் நூல் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த முடிவால் நூல் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டு சரியான விலையில் நூல்கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், நூல் விலை குறித்து மில்கள்விசைத்தறியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கிறோம்என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications