தமிழகத்தில் இன்று
கார்கில் போருக்கு நாங்களே காரணம்....பொறுப்பேற்கிறது பாக். தீவிரவாத அமைப்பு
டெல்லி:
கார்கில் ஊடுறுவலுக்கு தாங்களே காரணம் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும்தீவிரவாதக் கும்பலான லஷ்கார் இ தொய்பா கூறியுள்ளது.
கார்கில் போர் முடிந்து பல மாதங்களுக்குப் பின் பாகிஸ்தானின் தீவிரவாரதக்கும்பலான லஷ்கார் இ தொய்பா ஊடுறுவலுக்கு நாங்கள் தான் காரணம் எனபகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
லாகூரில் உள்ள மர்காஸ் அல் தவா வல் இர்ஷாட் (மத போதனை மற்றும் மதத்தைபரப்பும் அமைப்பு) அமைப்புதான் ரஷ்கார் இ தொய்பாவை நடத்தி வருகிறது. இதன்முதல்வரான பேராசிரியர் சவார் இக்பால் கூறுகையில்:
கார்கிலிலிருந்து எங்களைக் கட்டாயப்படுத்தி வாபஸ் பெறச் செய்தார், முன்னாள்பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது செயலை நினைத்து வெட்கப்படுகிறோம்.
எங்களது போதனை மையத்தில் படிக்கும் மாணவர்கள் பலரும் முஸாபராபாத் என்றஇடத்திற்கு மேல் பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். எங்களது போக்கில் எந்தவிதமான மாறுதலும் இல்லை. காஷ்மீருக்கு சுதந்திரம் பெறுவது அல்லது அதைபாகிஸ்தானுடன் இணைப்பதே எங்கள் குறிக்கோள்.
நாங்கள் இந்தியாவில் போராடவில்லை. ஏனென்றால் காஷமீர் பாகிஸ்தானின் ஒருபகுதியாகும் என்றார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
