தமிழகத்தில் இன்று
"தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை
சென்னை:
தீவிரவாதிகளை ஒடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதாது. கடுமையான தண்டனைதரக் கூடிய புதிய சட்டங்கள் தேவை என்று பாரதிய ஜனதா கட்சியின்பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடு சென்னையில் தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாட்டை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வெளிநாட்டு சக்திகளால் தீவிரவாதிகள்இயக்கப்படுகின்றனர். அவர்களை தண்டிப்பதற்குத் தற்போது நாட்டில் உள்ளசட்டங்கள் போதாது. எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படுகிறது.
தற்போதுள்ள சட்டங்களே தீவிரவாதிகளை தண்டிக்க போதுமானது என்று மனிதஉரிமை கமிஷன் கருத்து கூறியுள்ளது. அக்கருத்தை பா.ஜ.க. ஏற்காது. தீவிரவாதிகளைஒடுக்க "தடா சட்டம் போன்ற புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
மனித உரிமையை விட தேச நலன் முக்கியமானது. வெளிநாடுகளிலும் தளம்அமைத்து இயங்கி வரும் தீவிரவாதிகளையும், அவர்களது அமைப்புகளையும்கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவதில் மத்திய அரசு பொதுக் கருத்துஒன்றை உருவாக்க வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு புதிய சட்டம் தேவையா? என்று மத்தியசட்டக் கமிஷனிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுபடி சில அவசியமான சூழ்நிலைகளில் கடுமையான புதியசட்டம் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான புதிய சட்டம் தேவை. அதேசமயம் அதைதவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும் பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்று மனிதஉரிமை கமிஷன் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.
நாட்டில் 10 வழக்குகளில் கூட தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது தான்தற்போதைய நிலை. இதை மாற்ற கடுமையான சட்டங்களால் மட்டுமே முடியும் என்றுபா.ஜ.க .நம்புகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.அதனால் கூட்டணிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என்பது சுத்த பிதற்றல். தமிழகத்தில்இப்பிரச்னையை முதல்வர் கருணாநிதி சுமுகமாக தீர்த்து வைப்பார் என்றார் நாயுடுநம்பிக்கையுடன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications