தமிழகத்தில் இன்று
வருகிறது பல்கலை. மாணவர்களுக்கு திருமண ஆலோசனை மையம்
டெல்லி:
பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பயனடைவதற்காக இந்தியாவில் உள்ள 25 பல்கலைக் கழகங்களில் திருமண ஆலோசனை மையம்தொடங்கப்படும் என்று மத்திய சமூக நல வாரியம் தெரிவித்துள்ளது.
வாரியத்தின் தலைவர் மிர்துலா சின்ஹா இதுகுறித்துக் கூறுகையில், திருமணம் என்பது புனிதமான உறவு. திருமணம் என்றால் என்ன என்று இன்றையஇளைஞர்களுக்கு முழுமையாகவும், தெளிவாகவும் தெரியவில்லை.
கணவனும், மனைவியும் திருமணத்துக்குப் பிறகு எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும் என்று இளைஞர்களுக்குத் தெரியவில்லை. கூட்டுக் குடும்பம் என்ற முறைஇப்போது இல்லை.
இதனால் திருமணம், வாழ்க்கை, குடும்பம் ஆகியவை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. பெற்றோர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு தனிக்குடித்தனம் செய்யும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆகவே இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 25 பல்கலைக் கழகங்களில் திருமண ஆலோசனை மையங்கள்தொடங்கப்படும்.
திருமணம், வாழ்க்கை போன்றவை குறித்து இளைஞர்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படுவதுடன், அவர்களுக்குச்சரியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications