தமிழகத்தில் இன்று
செருப்பைக் காட்டியதால் அவமானப்படுத்தினோம்: "ஈவ் டீசிங் வாலிபர்கள்
சேலம்:
"செருப்பைக் காட்டித் திட்டியதால், நிர்வாணப்படுத்துவோம் என மிரட்டினோம் என சேலத்தில் மாணவி அகிலா ஈவ்டீசிங் வழக்கில் கைதான 3 பேரும்போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அரசு மேல்நிலைபள்ளியில் படித்து வந்த மாணவி அகிலாவை 3 பேர் ஈவ் டீசிங் செய்தனர். இதனால்அவமானமடைந்த அகிலா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் யூசுப் (20), நூர் முகமது (19), ஜாபர் (20), ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ளவாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
நாங்கள் 3 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வோம். ஆட்டோவில் ஒன்றாகச் செல்வோம். கடந்த 7-ம் தேதி தம்மம்பட்டிக்குநூர் முகமது, யூசுப் ஆகியோர் மொபட்டில் சென்று, அங்கிருந்த பள்ளி மாணவிகளைக் கிண்டல் செய்தோம். அப்போது அகிலாவையும் கிண்டல் செய்தோம்.அகிலா செருப்பைக் காட்டித் திட்டினார்.
இது பற்றி யூசுப்பிடம் சொன்னோம். யூசுப், செருப்பைக் காட்டி திட்டியதால் அவளை மிரட்ட வேண்டும் எனக் கூறினான். எனவே நாங்கள் 3 பேரும்ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றோம். பள்ளி விட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து கொண்டிருந்த அகிலாவை பின் தொடர்ந்து கேலி செய்தோம். அவள் பஸ்சில் ஏறிஅமர்ந்து கொண்டாள்.
நாங்களும் பஸ்சில் ஏறி, செருப்பைக் காட்டி மிரட்டுகிறயா? உன்னை நிர்வாணப்படுத்தினால் தான் எங்கள் ஆத்திரம் தீரும் என கூறிவிட்டுச் சென்றோம் என்றுவாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
அகிலாவின் தந்தை ராஜேந்திரன் கூறும்போது, எனது மகளுக்கு ஏற்பட்ட நிலை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பள்ளியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.
இதற்கிடையே, சேலம் ரூரல் எஸ்.பி. ராஜேந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கையில், இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, போலீஸ் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யாராவது ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ, அல்லது மாவட்ட எஸ்.பி. அலுவகத்தையோ தொடர்பு கொண்டு புகார்தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications