தமிழகத்தில் இன்று
டெலிபோனில் வந்த ரூ. 50 லட்சம் ஹெராயின்
சென்னை:
மர்ம பார்சலில் வந்த டெலிபோன் கருவியை சோதனையிட்ட போது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின்போதைப்பொருள் சிக்கியது.
சென்னை, மந்தைவெளி ஆர்.கே மடம் சாலையில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருபவர் கே.ஏ.பாலாஜி.இவருக்குக் கடந்த 14-ம் தேதி ஒரு பார்சல் வந்தது.
தனியார் கூரியர் நிறுவனத்தை சேர்நத ஒருவர் அந்த பார்சலை கொண்டு வந்தார். அப்போது பாலாஜிகடையை திறக்கவில்லை. அதனால் பாலாஜியின் கடைக்குப் பக்கத்தில் உள்ள கடைக்காரரிடம்ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார் கூரியர் பணியாளர்.
பின்னர் கடையைத் திறக்க வந்த பாலாஜி பார்சலைப் பிரித்து பார்த்த போது புது விதமான டெலிபோன்இருந்தது. அதில் ஆர்பிட் என்று எழுதியிருந்ததது. அந்த டெலிபோன் மீது பாலாஜிக்கு சந்தேகம் வந்தது.டெலிபோன் கவரைப் பிரித்தால் அது வெடிக்கும் என்ற சந்தேகம் வந்தது. அவர் பட்டினப்பாக்கம்போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் டெலிபோனை எடுத்துச் சென்று பிரித்து சோதனையிட்டனர். டெலிபோனின்பின்புறத்தில் நான்கு பிளாஸ்டிக் பைகளில் பழுப்பு நிற பொருள் இருந்தது. அதை வெளியே எடுத்துப்பார்த்தபோது அது ஹெராயின் என தெரியவந்தது.
அதனுள் இருந்த ஹெராயின் 200 கிராம் எடை கொண்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 50 லட்சம்ரூபாய் என்று தெரிவித்தனர்.
டெலிபோன் கருவியில் போதைப் பொருளை மற்ைததுக் கடத்தியது யார? பாலாஜிக்கும் அவருக்கும்என்ன தொடர்பு என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications