தமிழகத்தில் இன்று
ஆனந்த் - கிராம்னிக் சாம்பியன்
டார்ட்மண்ட் (ஜெர்மனி):
ஸ்பார்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் இருவரும் முதலிடம் பெற்றனர்.
8-வது சுற்றின் முடிவில் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆனந்த், கடைசிச் சுற்றில் ஜெர்மனியின் ராபர்ட் ஹப்னரை எதிர்த்து விளையாடினார்.வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஹப்னர், 39-வது நகர்த்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறினார். இதையடுத்து ஆனந்த் 6 புள்ளிகள்பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த முதல் நிலை ஆட்டக்காரர் கிராம்னிக், ஃபிடே உலக சாம்பியன் அலெக்சாண்டர்காலிஃப்மெனை எதிர்த்து விளையாடினார். 15-வது நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் டிரா செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் தலா.5 புள்ளிகள் கிடைத்தன.
தலா 6 புள்ளிகள் எடுத்த ஆனந்த், கிராம்னிக் இருவரும் ஸ்பார்கஸன் செஸ் பட்டத்தைக் கூட்டாக வென்றனர். கடந்த முறை நடந்த போட்டியிலும் இருவரும்கூட்டாகப் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 புள்ளிகள் எடுத்திருந்த பீட்டர் லேகோ கடைசி சுற்றில் கம்ப்யூட்டருடன் நடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் 3-ம் இடம் பெற்றார். ஆடம்ஸ்,அகோபியன் ஆகியோரும் தலா 5 புள்ளிகள் எடுத்து 3-ம் இடம் பெற்றனர்.
ஸ்பார்கஸன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக தரப் பட்டியலில் ஆனந்த்துக்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன. இது தவிர, உலக தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கிராம்னிக்கை முந்துவதற்கு அவருக்கு 8 புள்ளிகளே தேவை.
அடுத்து செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள செஸ் உலகக் கோப்பைப் போட்டியில் ஆனந்த் பங்கு கொள்கிறார். அக்டோபர் மாதம் லண்டனில்நடைபெறும் ஆட்டத்தில் கிராம்னிக்கும், உலக சாம்பியன் காஸ்பரோவும் மோதுகின்றனர்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications