தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர்கள் மான் கறி சாப்பிட்டதாக கூறுகிறார் தாமரைக்கனி
சென்னை:
சாதி மோதலை அடக்கும் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த போலீஸ்காரர்கள், புள்ளி மான் ஒன்றை சுட்டுக் கொன்று சாப்பிட்டதாக அதிமுகஎம்.எல்.ஏ. தாமரைக்கனி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு அவர் பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். இந்த பேக்ஸ் செய்தி குறித்துசென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வி.புதுப்பட்டியில் சமீபத்தில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து20 சிறப்புப் போலீஸ் படை போலீஸ்காரர்கள் பாதுகாப்புப் பணியிக்கு வந்தனர்.
அந்தப் பணியின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அனைவரும் கான்சாபுரம் மலைப் பகுதிக்குச் சென்றனர். தேடுதல் வேட்டையின்போது, ஒரு புள்ளிமானை சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த சாமியார் கோவில் சர்ச் பகுதிக்கு அதைக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.
எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், வனத்துறை அதிகாரிகளுக்குத தெரிவித்தேன். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்தி சோதனையில்மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மானின் தோல் மற்றும் எலும்புகள் கிடைத்தன.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களைக் கைது செய்யுமாறு வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருக்குப்புகார்கள் கொடுத்தேன். ஆனால் இதை மூடி மறைக்க அவர்கள் முயல்கின்றனர். தமிழக காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிப்பதால்,அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்க நினைக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தபோலீஸ்காரர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தாமரைக்கனி கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications