தமிழகத்தில் இன்று
வைரம் பட்டை தீட்டுதல்: இந்தியா, ரஷ்யா ஒப்பந்தம்
மாஸ்கோ:
வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இணைந்து செயல்படுவது என இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான இறுதி ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பொருளாதாரக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந் நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு வைரங்களை ரஷ்யா வழங்கும். அந்த வைரங்கள் இந்தியாவில் பட்டை தீட்டப்படும்.
பட்டை தீட்டிய வைரங்களை இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டு சேர்ந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும். இது தொடர்பான ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இந்த புதிய ஒப்பந்தம் உள்பட மேலும் பல ஒப்பந்தங்களும்கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒப்பந்தங்களில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், ரஷ்ய அதிபர்புடினும் கையெழுத்திடுவார்கள்.
உலகிலேயே வைரம் அதிக உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா என்பதும், வைரங்களைப் பட்டை தீட்டுவதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது இந்தியாஎன்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்படுகின்றன.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications