தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிஜியை விட்டு வெளியேற மாட்டேன் என்கிறார் செளத்ரி

சுவா:

எந்தச் சூழ்நிலை வந்தாலும், பிஜியை விட்டு வெளியேற மாட்டேன் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் மகேந்திர பால் செளத்ரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரிஜ்லால், பிஜியிலிருந்து இந்திய வம்சாவளியினர் வெளியேறுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு மகேந்திரசெளத்ரி கூறியதாவது:

பிஜியில் 1987-ம் ஆண்டு இரு புரட்சிகள் ஏற்பட்டன. அதன் பிறகு இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல பிஜியில் வசிக்கும் அனைத்துத் தரப்புமக்களிடையேயும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அடுத்து வந்த அரசுகள் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது.

கடந்த 13 ஆண்டுகளாக மேற்கொண்ட போராட்டத்தின் பலன், கடந்த மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான குழுவின் புரட்சியால் நிலைகுலைந்து விட்டது.

சமீபத்திய புரட்சியால் பிஜி அரசு மீது மக்களிடையே, குறிப்பாக இந்திய வம்சாவளியினரிடையே நம்பிக்கை இல்லை. இதனால், அதிக அளவில் இந்தியவம்சாவளியினர் பிஜியை விட்டு வெளியேறிச் செல்கின்றனர்.

பிஜியிலிருந்து இந்திய வம்சாவளியினர் வெளியேறுவது துரதிருஷ்டவசமானது. இருப்பினும் அது எதிர்பார்த்த ஒன்றுதான். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம்,இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாமல் பிஜி நாட்டவர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுகின்றனர்.

ஆனால் நான் பிஜியை விட்டு வெளியேற மாட்டேன். தற்போது நிலைமை ஓரளவு சீராகியுள்ளது. எனது வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும்அதை பிஜியில் இருந்தே சந்திப்பேன். ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்றார் மகேந்திர சவுத்ரி.

தலைநகர் சுவாவில் வசித்து வந்த மகேந்திர சவுத்ரி, தலைநகர் சுவாவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாடி என்ற ஊருக்கு தனது வீட்டைமாற்றியுள்ளார்.

பிஜியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா, அமெரிக்கஆகிய நாடுகளில் குடியேறுவார்கள் என்று பிரிஜ் லால் கூறியுள்ளார்.

1987-ம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பிறகு இதுவரை 80 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் பிஜியை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.பிஜி நாட்டு மக்கள் தொகையில் 44 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிஜியில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் தினமும் 600-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வெளிநாட்டுக் குடியேற்ற உரிமை கேட்டுவிண்ணப்பித்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிஜியில், இந்திய வம்சாவளியினரிடம்தான் கரும்பு அதிகம் பயிராகும் நிலங்கள் உள்ளன. அவர்கள் எல்லாம்முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரிக்குத் தான் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 19-ம் தேதி பிஜி நாட்டின் தொழிலதிபரி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர் ஆயுதங்களுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துபிரதமர் மகேந்திர செளத்ரி உள்பட பலரைச் சிறைப்பிடித்து வைத்துக் கொண்டனர். அதன் பிறகு பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. பின்னர், பிஜிநாட்டவர்களைக் கொண்ட புதிய இடைக்கால அரசு பதவியேற்றது.

அதன்பிறகு புரட்சிக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மகேந்திர செளத்ரி உள்பட கடைசியாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 27 பேரும் சிலநாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+