தமிழகத்தில் இன்று
பிலிப்பைன்ஸ் மசூதியில் 21 பேர் சுட்டுக் கொலை
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மின்டநாவோ தீவில் லானாவோ டெல் சுர் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் நடந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
லானாவோ டெல் சுர் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய சிலர்மசூதிக்குள் புகுந்து அங்கிருந்த 22 பேரையும் சிறைப்பிடித்தனர்.
பின்னர் துப்பாக்கியால் அவர்கள் அனைவரையும் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில், உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் தவிர மற்ற 21 பேரும் அதே இடத்தில்இறந்தனர். காயமடைந்த கவுன்சிலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இத் தாக்குதலுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய இஸ்லாமிய மாகாணம் உருவாக்கவேண்டும் என்றுகேட்டுப் போராடி வரும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜானி மேஜர் மகானாஸ் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications