தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் பலி: 315 கிலோ ஆர்.டி.எக்ஸ். பறிமுதல்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 315 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடுகளில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை தீவிரவாதிகள் மறைத்து வைத்திருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்குஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் வந்தது.
இதையடுத்து அப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், 315 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பறிமுதல்செய்யப்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் முகாம்கள், அரசு அலுவலகக் கட்டடங்கள் போன்றவற்றைத் தகர்க்க இந்த வெடிபொருள்களைப் பயன்படுத்த தீவிரவாதிகள்திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 8தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ஆயுதங்களும்,வெடிபொருட்களும், இரண்டு வயர்லெஸ் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications