தமிழகத்தில் இன்று
முதல்வரையும், மூப்பனாரையும் சந்தித்த பா.ம.க தலைவர்கள்
சென்னை:
கடலூர் கலவரம் தொடர்பாக சென்னையில் திங்கள் கிழமை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர்கள், தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆகியோரைசந்தித்துப் பேசினர்.
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது. இதனால் இம்மாவட்டப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. கலவரத் தீயில்பஸ்கள் கொளுத்தப்பட்டன. வீடுகள் தீக்கிரையாகின.
இதுதொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு இரு தரப்பையும் சேர்ந்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வன்முறை பரவாத வண்ணம் தீவிர நடவடிக்கையைதொடர்கின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் மத்திய அமைச்சர்கள் என்.டி.சண்முகம்,பொன்னுசாமி உள்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் முதல்வர்கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, கடலூர் மாவட்ட சம்பவங்கள்தொடர்பாக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாகமுழுமையாக விசாரித்து நியாயத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமுதல்வரிடம் வலியுறுத்தினோம்.
அதற்கு அவர் நியாயத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்என்றார்.
பின்னர் இதே குழுவினர் சத்தியமூர்த்தி பவனில் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்துப் பேசினர்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் த.மா.கா. கூட்டணியில் உள்ளனர்.
த.மா.கா. ஆதரவின் காரணமாக தான் விடுதலை சிறுத்தைகளால் வன்முறையில் ஈடுபட முடிகிறதுஎன்று பா.ம.க வினர் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.
இச்சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரை கட்டுப்படுத்தி வைக்குமாறும், கலவரத்தைதூண்டாமல் அமைதியை ஏற்படுத்த உதவுமாறும் மூப்பனாரை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications