தமிழகத்தில் இன்று
மும்பையில் தொடரும் சிவசேனைத் தொண்டர்கள் போராட்டம்
மும்பை:
சிவ சேனைத் தலைவர் பால்தாக்கரேயை விசாரணைை செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டதையடுத்து தாக்கரே ஆதரவாளர்கள் நடத்தி வரும்போராட்டம் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
மும்பையின புறநகர்ப்பகுதியில் இப் போராட்டம் காரணமாக பதட்டம் ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன.பஸ், ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
1992-93 ம் ஆண்டு மும்பையில் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்போதுசிவசேனையின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னியில் பால்தாக்கரே இக்கலவரம் குறித்து எழுதினார்.
மும்பைக் கலவரம் குறித்து விசாரணை நடத்திய கமிஷன் பால்தாக்கரே மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டமகாராஷ்டிர அரசு தாக்கரேயிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது.
இதையடுத்து தாக்கரேயின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
மும்பையின் வடக்குப் பகுதியான டோம்பிவிலியில் 300 க்கும் மேற்பட்ட தாக்கரே ஆதரவாளர்கள் ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து மறியல்செய்தனர். இதனால் மின்சார ரயில்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடவில்லை. பள்ளிகளுக்குவிடுமுறை விடப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிட்டன.
இதுவரை எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications