கீதையின் பாதையில்...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijayநடிகர் விஜய் - சங்கீதா விவகாரத்து என்று செய்தி வெளியிட்ட வாரப் பத்திகை ஆசிரியரை கைது செய்யக்கோரி விஜய் ரசிகர்கள் திங்கள் கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழ் திரையுலகின் இளம் ஹீரோ விஜய். இவரது மனைவி சங்கீதா. சில மாதங்களுக்கு முன்புதான் இருவரும்காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இச்சூழ்நிலையில் சென்னையில் வெளிவரும் வாரப்பத்திரிகை ஒன்றில் "நடிகர் விஜய், தனது மனைவிசங்கீதாவை விவகாரத்து செய்கிறார் என்று செய்தி வெளியானது. இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில்பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திங்கள்கிழமை காலை விஜய் ரசிகர்கள் 300 பேர் 25-க்கும் மேற்பட்ட வேன்களில் எழும்பூரில்உள்ள போலீஸ் கமிஷனர் காளிமுத்து அலுவலகம் வந்தனர். எந்த அனுமதியும் பெறாமல் கும்பலாகஅவர்கள் கமிஷனர் அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

திடீரென்று ஒரு பெரும் படை அலுவலகத்திற்குள் புகுந்ததை கண்டதும் கமிஷனர் அலுவலகமே பரபரப்புஅடைந்தது. உடனடியாக வயர்லெஸ்சில் தகவல்கள் பறந்தன. அடுத்த சில விநாடிகளில் 500, 600போலீசார் அங்கே திரண்டனர்.

அதற்குள் திரண்டு வந்த ரசிகர்கள் கமிஷனர் அறை வாசலில் முற்றுகையிட்டு விட்டனர். அவர்களைபோலீசார் அப்புறப்படுத்தி அலுவலகத்திற்கு வெளியே கொண்டு சென்றனர்.

விஷயத்தை விசாரித்த பின்னர் ரசிகர்களின் பிரதிநிதிதிகள் ஐந்து பேர் மட்டும் கமிஷனரை சந்திக்கஅனுமதிக்கப்பட்டனர். பொய்ச் செய்தி வெளியிட்ட வாரப் பத்திரிகை ஆசிரியர் மணியை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடம் புகார் மனு கொடுத்தனர்.

விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல; எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. அவரையும், அவரது சொந்தவாழ்க்கையையும் களங்கப்படுத்தும்படி செய்தி வெளியிட்டுள்ளதை கண்டித்து தீக்குளிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்று ரசிகர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+