தமிழகத்தில் இன்று
உலகக் கோப்பையை வெல்வோம் என்கிறார் ரோஜர் பின்னி
பெங்களூர்:
15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் பயிற்சியாளர்ரோஜர் பின்னி கூறினார்.
இன்டியாஇன்ஃபோ.காம் என்ற இன்டர்நெட் செய்தித் தளத்துக்கு அவர் அளித்த பேட்டி:
இங்கிலாந்தில் வரும் ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 15 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாட உள்ளது.
கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியஅணியினர் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடனும், ஆசிய சாம்பியன் கோப்பையை வென்ற உற்சாகத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள்என்று எதிர்பார்க்கிறேன்.
இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்து சூழ்நிலை பாதிப்பாக இருக்காது என்று கருதுகிறேன். ஏனெனில் இங்கிலாந்தில் உள்ளதைப் போல சூழ்நிலையில்தான்மலேஷியாவில் அவர்கள் விளையாடினர்.
உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும்.ஒவ்வொரு அணியும் 3 ஆட்டங்களில் விளையாடும். அதன் பிறகு அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்தான் அதன் பலம். இந்திய அணியில் இடம் பெறும் 11 வீரர்களும் சிறப்பா பேட்டிங் செய்யக்கூடியவர்கள். பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் பலம் பெற்றுள்ளனர். ஆனால், பீல்டிங்கிலும், கேட்ச் பிடிப்பதிலும் இந்திய வீரர்கள் பலவீனமாக உள்ளனர்.
உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் சிறிய பயிற்சி முகாம் இந்திய வீரர்களுக்கு நல்ல பலனைத் தரும் என்று கருதுகிறேன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications