தமிழகத்தில் இன்று
சர்ச் குண்டுவெடிப்பு: ஆந்திர அரசு அலட்சியம் காட்டுவதாக கூறுகிறது மார்க்சிஸ்ட் கம்யூ.
ஹைதராபாத்:
ஆந்திரா, கர்நாடாகா, கோவா மாநில சர்ச்சுகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசும், போலீஸ்அதிகாரிகளும் அலட்சியத்துடன் இருக்கிறார்கள் என்று ஆந்திர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பி.வி.ராகவலு குற்றம்சாட்டினார்.
அண்மையில், கர்நாடகா, ஆந்திரா, கோவாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடித்தது. பெங்களூரில் கிறிஸ்தவ தேவாலயத்திலும்,மாகடிசாலையிலுள்ள மினர்வா சர்க்கிள் பகுதியிலும் சென்று கொண்டிருந்த வேனிலும் குண்டுவெடித்தது. வேன் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் இறந்தனர்.
இதையடுத்து போலீசார் இச்சம்பவங்களுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த தீந்தார் அஞ்சுமான் இயக்கத்தினருக்கும் தொடர்பிருக்கும் என்று கருதிவிசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ராகவலு நிருபர்களிடம் கூறுகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தீந்தார் அஞ்சுமான்இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேர் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால்இதுதொடர்பாக முழுமையான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகள் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். குற்றவாளிகளைக்கண்டுபிடித்து, அவர்கள் மீதும், அவர்களது இயக்கத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகள் குறித்து சில தகவல்களை மறைத்து, சில தகவல்களை வெளியிடுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications