தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அரசியல் சட்டத் திருத்தத்திற்கு புத்த பிட்சுக்கள் எதிர்ப்பு

கொழும்பு:

இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவுக்கு புத்த மதத்தினரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான ஆளும் மக்கள் கூட்டணி அரசும், முக்கிய எதிர்க்கட்சியானஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவை தயாரித்துள்ளன.

இதற்கு ஏற்கெனவே தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இப்போது இலங்கையின் முக்கிய மதமான புத்த மத்ததைச்சேர்ந்தவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பழைய அரசியலமைப்புச் சட்டத்தில் புத்த மதத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், உரிமைகளும், பாதுகாப்பும் புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவில்நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள புத்தமத அமைப்பின் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.

புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதா புத்த மதத்தை முழுமையாக புறக்கணிப்பதாக உள்ளது. இது புத்த மதத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று தேசியசங்க கவுன்சில் தலைவர் மதுலுவாவே சோபிதா தேராவும் மற்ற தலைவர்களும் கூறியுள்ளனர்.

இலங்கையில் புத்த மதம் முதன்மையான மதமாக அறிவிக்கப்பட்டது முதல் அந்த மதத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்புபா பாதுகாப்பும், உயரிய இடமும்வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புத்த மதத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், புலிகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து புத்த மதத்துக்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும் பிரிவு 9-ஐ நீக்க இலங்கை அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதா குறித்து ரகசியமாகவே பேச்சு வார்த்தைகளும், ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்கட்சிகளும் வெளிநாட்டு அரசுத் தூதரர்களும் இவற்றில் கலந்து கொண்டனர். ஆனால், சிங்கள புத்த மதத் தலைவர்கள் ஒருவர் கூட இவற்றில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை.

புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவால் புத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து மக்களிடேயை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் புதிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று தேராவும் மற்ற தலைவர்களும் கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+