தமிழகத்தில் இன்று
கமீலாவைக் கல்யாணம் செய்யும் ஐடியாவில் சார்லஸ் இல்லை
லண்டன்:
காதலி கமீலாவைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இல்லை. இது தொடர்பாக பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியில்உண்மையில்லை என்று சார்லஸின் மூத்த உதவியாளர் தெரிவித்துள்ளார்.
மனைவி டயானா, 1997-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒரு கார் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து தனிமையில் இருந்த சார்லஸ், கமீலா பார்க்கர்பெளல்ஸ் என்ற பெண்ணுடன் நட்பு கொண்டார்.
இந்த நட்பு காதலாக மாறியது. நீண்ட நாட்களாக இருவருடைய காதலும் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகஇருவரும் வெளி நிகழ்ச்சிகளிலும், விருந்துகளிலும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். தியேட்டர்களுக்குக் கூட இருவரும் சேர்ந்தே சென்றனர்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேச்சு எழுந்தது. இதை இரு தரப்பினரும் மறுக்கவோ அல்லது ஒப்புக் கொள்ளவோஇல்லை.
சார்லஸின் காதல் குறித்து இங்கிலாந்து மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் காதலை அவர்கள் தவறா எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவந்தது. இந் நிலையில், பிரிட்டிஷ் சண்டே பத்திரிக்கை சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது.
சார்லஸும் கமிலாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இதுதொடர்பாக ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்தி வெளியிட்டது.
இதை சார்லஸின் மூத்த உதவியாளர் ஸ்டீபன் லம்பார்ட் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தி டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் சண்டே பத்திரிக்கைச்செய்தியில் உண்மையில்லை. இச் செய்தி தொடர்பான செய்திகளை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று லம்பார்ட் கூறியதாக டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
பிரிட்டிஷ் சண்டே வெளியிட்ட செய்தி குறித்து பத்திரிக்கைப் புகார் கமிஷனுக்கு லம்பார்ட் கடிதம் எழுதியுள்ளதாகவும் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications