தமிழகத்தில் இன்று
விராலிமலை மயில்களுக்கு என்ன ஆச்சு?
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மர்மமான முறையில் இறந்து போகும் மயில்கள் குறித்து உடனடியாகவிசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
விராலிமலைப் பகுதியில் மயில்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்த மயில்கள் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றன. அவைகள் எப்படி இறக்கின்றன என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. தொற்றுநோய்காரணமாக அவைகள் இறக்கின்றன என்று கூறப்படுகின்றது.
அன்னவாசல் ஒன்றியத்தில் பல ஊர்களில் மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் அங்குள்ள காடுகளிலும்,வயல்களிலும் விளையும் தானியங்களை சாப்பிடும். இதனால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நஷ்டம்ஏற்படுகின்றது. இதனால், வயல்களில் எலிகளை ஒழிக்கப் பயன்படுத்தும் விஷம் கலந்த உணவை வைத்துவிடுகின்றனர்.
வயல்களுக்கு வந்து அவற்றைத் தின்னும் மயில்கள் இறந்து விடுகின்றன. சில மயில்கள் இவற்றைத் தின்று இரண்டு,மூன்று நாட்கள் உயிருக்குப் போராடி பின்னர் இறக்கின்றன. இதுதவிர, சில மயில்கள் தொற்றுநோயால்இறக்கின்றன.
மயில்களை சிலர், இறகுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் கண்ணி வைத்துப் பிடிப்பதாலும், கறிக்காக சுட்டுக்கொல்வதாலும் அப்பகுதியில் அடிக்கடி மயில்கள் இறக்கின்றன.
இதனால் விராலிமலை மற்றும் அன்னவாசல் பகுதிகளில் சரணாலயங்கள் அமைத்து மயில்களைப் பாதுகாக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மனுக்கள் அனுப்பியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications