தமிழகத்தில் இன்று
அஸ்ஸாமுக்கு பெருமை சேர்க்கும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்
கவுஹாத்தி:
சர்வதேச அளவில் மட்டுமல்ல தேசிய அளவில் கூட விளையாட்டுத் துறையில் அஸ்ஸாம் மாநிலம் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. அதுவும் கிரிக்கெட்உலகைப் பொறுத்தவரை பூஜ்யம் என்றே சொல்லலாம்.
இந்திய கிரிக்கெட் அணியில் மேற்கு வங்கத்துக்கு அடுத்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது.இப்போது அந்த குறையைப் போக்க வந்துள்ளனர் இரு வீரர்கள்.
அதுவும், 15 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் ஆசியாவிலேயே சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமைகளை அவர்கள்பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகில் அஸ்ஸாம் மாநிலம் தனது முதல் பதிப்பை இவ்வளவு சிறப்பாகப் பதிக்கக் காரணமானவர்கள் மிரிஜென் தலுக்தார், பாலாஷ் ஜோத்தாஸ்.
கோலாலம்பூரில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடந்திய 15 வயதுக்குப்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிகோப்பையை வென்றது.
இப் போட்டித் தொடரில்18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசியாவின் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார் மிரிஜென் தலுக்தார். 2 சதங்களுடன்மொத்தம் 317 ரன்கள் குவித்த பாலாஷ் ஜோத் தாஸ், ஆசியாவின் சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இருவரும் கவுகாத்தி கிரிக்கெட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத் திறமையால்தங்கள் மாநிலத்துக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்கிறார் தலுக்தார். ஆசியாவின் சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்வுசெய்யப்பட்டாலும் எனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றிதேடித் தருவேன் என்கிறார் ஜோத் தாஸ்.
இருவரும் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி துவங்கும் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கு கொள்ளஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு வீரர்களும் தற்போது விஜய் மெர்சண்ட் மற்றும் கூச் பீகார் கோப்பைப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும்இவர்கள் இருவரும், அடுத்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அகாதெமிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்படுவார்கள் என்றுநம்புவதாக கவுகாத்தி கிரிக்கெட் பயிற்சி மைய பயிற்சியாளர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications