தமிழகத்தில் இன்று
ஜெ.வின் ரூ, 11 கோடி சொத்துக்களை முடக்க உத்தரவு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ரூ 11.59 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை முடக்கி வைக்குமாறு முதலாவது தனிநீதிமன்ற நீதிபதிஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சிகாலத்தின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட, சசிகலா, சுதாகரன்,இளவரசி, இவரது மகன் விவேக் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு முதலாவது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 24 வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் நல்லம்மநாயுடு முதலாவது தனிநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதன்படி, ஜெயலலிதா தனது பெயரிலும், சசிகலா, சுதாகரன், இளவரசி, அவரது மகன் விவேக் ஆகியோரின் பெயரிலும் வாங்கியுள்ள ரூ 11 கோடியே 59லட்சத்து 49 ஆயிரத்து 158 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை முடக்க வேண்டும்.
இல்லாவிடில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை விற்றுவிடவோ அல்லது இடமாற்றம் செய்யவோமுயற்சிக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தன்னை கொடுமைப்படுத்தவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும்,இம்மனுவைத் தனிநீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கடந்த வாரம் இம்மனு மீதான இருதரப்பு வக்கீல்கள் வாதம் செய்தனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிரந்தரமாக முடக்கி வைக்கஉத்தரவிட்டார்.
அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி வழக்கின் புலன்விசாராணை அதிகாரி தாக்கல் செய்த இந்த மனுவை சிறுவழக்குகளைவிசாரிக்கும் நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த மனுவைத் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு எந்த வித அதிகாரமும் இல்லைஎன்றும் ஜெயலலிதாவின் வக்கீல் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த மனுவை விசாரிக்க தனிநீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. அரசுத் தரப்பினர் தாக்கல் செய்த இந்த மனு ஏற்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டிருந்தாலும் விசாரணை முடியும் வரை ரூ 11.59 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள்அனைத்தும் நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும். ஜெயலலிதா மற்றும் நான்கு பேருக்குச் சொந்தமான 21 வாகனங்களை உடனடியாக அதன்ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications