தமிழகத்தில் இன்று
மாருதி ஸென் டீசல் காரின் விலை குறைகிறது
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவனம் தனது மாருதி ஸென் டீசல் காரின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்க இம் முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாருதி நிறுவனம், டீசல் சக்தியில் இயங்கும் முதல் காரான ஸென்-டி வகைக் காரை 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உயர் சக்தி கொண்டதாகஇருந்தாலும் அதன் விலை ரூ. 4.5 லட்சமாக இருந்ததை அடுத்து விற்பனை குறைவாக இருந்தது.
இதையடுத்து ஸென்-டி காரின் விலை ரூ.3.63 லட்சமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸென்-டி கார் ரூ.3.87 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
இந் நிலையில், ஸென்-டி காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கவும், காரின் விலையைக் குறைக்கவும் மாருதி உத்யோக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
காரின் விலையில் எவ்வளவு குறைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. குறைந்தது ரூ.15 ஆயிரம் அளவுக்கு விலை குறையும் என்று அந் நிறுவனஅதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே மாருதி கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக மாருதி-800, ஆம்னி, வேகன்-ஆர் ஆகிய கார்களின் விலையை மாருதி உத்யோக்நிறுவனம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications