தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வாலிபரின் உயிரைப் பறித்த முன்விரோதம்
கோவை:
கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் சின்னசிவா. இவரது நண்பர்கள் மயில்சாமி மற்றும் சண்முகம். கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பர்களிடையேமுன்விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் திங்கள்கிழமை இரவு நீலிக்கோணம்பாளைத்தில் உள்ள மதுக் கடை அருகே சின்னசிவா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தமயில்சாமி, சண்முகம் இருவரும் சின்னசிவாவைக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்திலேயே சின்னசிவா இறந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications