தமிழகத்தில் இன்று
3850 விளையாட்டு மையங்கள் அமைக்கிறது தமிழக அரசு
சென்னை:
தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் 3850 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையங்கள்உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் தற்போது ஒருசில பள்ளிகளில் மட்டும் தான் விளையாட்டு உடற்பயிற்சிமற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. இதனால் 35 சதவீதம் மாணவர்கள்அல்லாத இளைஞர்கள் வசதிகளை பெற இயலாத நிலை உள்ளது.
இவர்களின் நேரம் மற்றும் சக்தியை ஒருமுகப்படுத்தவும், கெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழஅனைத்து ஊராட்சிகளிலும் நகர்ப் பகுதிகளிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிமையங்கள் உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3850 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிமையங்கள் அமைக்க ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.77லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மையங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.23,000 வீதம் மொத்தம் 8 கோடியே 85 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ஊரக வளர்ச்சித் துறை தனது பங்காக வழங்குகிறது.
இதன்படி மாநிலத்தில் உள்ள ஊராட்சிகளில் 3850 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிமையங்களில் ஒரு மையத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 9 கோடியே 62லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உருவாக்கப்படும்.
இம்மையங்கள் அமைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தேவையான தொழில்நுட்பஅறிவுரைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் வழங்குவார்கள். கிராமஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்படவுள்ள இம்மையங்களுக்கு கட்டமைப்புவசதிகளை அந்தந்த ஊராட்சிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், கிராமஊராட்சித் தலைவர் மற்றும் உள்ளூர் இளைஞர்களோடு கூடிப் பேசி விளையாட்டுமையங்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அனைத்து விளையாட்டு வசதிகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும்கூறப்பட்டுள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு அருகிலோ அல்லது சமுதாயக் கூடம்மற்றும் டி.வி. அறை அருகிலோ அமைக்கலாம். ஆனால், பள்ளிக் கூட விளையாட்டுமைதானங்களில் அமைக்கக் கூடாதென்றும் அரசு ஆணையிட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications