தமிழகத்தில் இன்று
டிரவுசருடன் கால்பந்து ஆடிய 12 வீரர்களுக்கு மொட்டை
காந்தார் (ஆப்கானிஸ்தான்):
முஸ்லீம் சட்டத்தை மீறும் வகையில் டிரவுசருடன் கால்பந்து விளையாடிய 12பாகிஸ்தான் கால்பந்து வீரர்களின் தலை மொட்டை அடிக்கப்பட்டது.
மொட்டை உபயம் - ஆப்கானிஸ்தானின் தலிபான் மதவாதிகள்.
காந்தார் நகரில் நடந்த கால்பந்துப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் டிரவுசர்அணிந்திருந்தது முஸ்லீம்களின் உடை விதிகளை மீறுவதாகும் என்று தலிபான் நிர்வாகஅதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 12 பாகிஸ்தானிய கால்பந்து வீரர்களையும்கைது செய்து அவர்கள் தலைகளை மொட்டை அடித்தனர்.
தலிபான் வீரர்களிடமிருந்து 5 பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் தப்பி பாகிஸ்தான்தூதரகத்துக்கு சென்று விட்டனர். கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான்வீரர்கள், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான சாமன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.மொட்டை அடித்த பிறகு 12 வீரர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு காந்தார் கவர்னர் முல்லா ஹாசன் ரஹ்மான் கண்டனம்தெரிவித்தார். இந்த செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications