தமிழகத்தில் இன்று
ஜம்மு-காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 4பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
எல்லைப் பகுதி மாவட்டங்களான ராஜோரி மற்றும் பூன்ச் மாவட்டங்களில்தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுந்தர்பானி பகுதியில் தாதல் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு இடத்தில் நடந்த சண்டையில் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்ததுருக்கியைச் சேர்ந்த கொடிய தீவிரவாதி உமர் துர்க்கி சுட்டுக் கொல்லப்பட்டார்.அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டனர்.
சுரான்கோட்டே பகுதியில் தாரா மோஹ்ரா கிராமத்தில் நடந்த சண்டையில் 3வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏகே-56ரக துப்பாக்கிகள், வயர்லஸ் கருவிகள், கையெரி குண்டுகள் போன்றவை பறிமுதல்செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications