தமிழகத்தில் இன்று
மாநில சுயாட்சி பிரச்சினை: வாஜ்பாயுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு
டெல்லி:
காஷ்மீர் மாநில சுயாட்சி பிரச்சினை குறித்து அம் மாநில முதல்வர் பரூக்அப்துல்லாவுடன் பிரதமர் வாஜ்பாய் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மாநில சுயாட்சி கோரிக்கை குறித்து பரிசீலிக்கமத்திய-மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைப்பது என இருவரும் முடிவுசெய்துள்ளனர்.
காஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பான தீர்மானம் காஷ்மீர்சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. ஆனால், இதை மத்திய அமைச்சரவைநிராகரித்துவிட்டது.
இதையடுத்து பாரதீய ஜனதா கட்சிக்கும் பரூக்குக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து பரூக் கட்சி விலகும் என்றும்கூறப்பட்டது.
இந் நிலையில், சுயாட்சி தீர்மானம் குறித்து பேச்சு நடத்த வரும்படி பரூக்குக்குவாஜ்பாய் அழைப்பு விடுத்தார். அதன்படி தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும்அதிகாரிகளுடன் டெல்லி வந்தார் பரூக்.
டெல்லியில் வாஜ்பாயை பரூக் திங்கள்கிழமை 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வாஜ்பாயை பரூக் செவ்வாய்க்கிழமைசந்தித்தார்.
வாஜ்பாய் வீட்டில் சுமார் 30 நிமிடம் இப் பச்சுவார்த்தை நடைபெற்றது. மாநிலசுயாட்சி கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து மத்திய, மாநில அமைச்சர்கள் குழுஅமைப்பது என இருவரும் முடிவு செய்தனர்.
இக் குழுவினர் சந்தித்துப் பேசி சுயாட்சி கோரிக்கை பற்றி பரிசீலித்து அரசுக்குஆலோசனை வழங்குவார்கள். அதன்படி காஷ்மீருக்கு எந்த வகையான சுயாட்சிஅதிகாரங்கள் வழங்குவது என முடிவு எடுக்கப்படும்.
காஷ்மீர் மாநில அரசுக் குழுவில் அம் மாநில நகர்புற மேம்பாட்டு அமைச்சர்ஜி.எம்.ஷா, சட்ட அமைச்சர் பி.எல். ஹண்டோ, நிதி அமைச்சர் அப்துல் ரகீம், கல்விஅமைச்சர் முகமது ஷாபி மற்றும் தொழில் அமைச்சர் போத்ராஜ்பால் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசுக் குழுவில் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டஸ் மற்றும் சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பேச்சு வார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பரூக் அப்துல்லா பேசியதாவது:
பிரதமருடனான பேச்சு வார்த்தை சுமுகமாக நடை பெற்றது. தமது கட்சி தொடர்ந்துதேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும். தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழுவிரைவில் கூட்டப்பட்டு தற்போது நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்துவிவாதிக்கப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications